திருச்சி: திருச்சி பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரம் மெயின் கார்டு கேட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை ( ஜூலை 8 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, வி என் நகர், மாதுளம் கொல்லை, சிதம்பரம் மஹால், பூசாரி தெரு, சிந்தாமணி, ஆண்டார் வீதி, வானப்பட்டறை, மாரிஸ் தியேட்டர், கோட்டை ஸ்டேஷன் ரோடு, பனையக்குறிச்சி, உறையூர் ஹவுசிங் யூனிட், கீரை கொல்லை, மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, சீரா தோப்பு, முத்தரசநல்லூர், ஜீயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளனர்.