சென்னை: தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறுப்பாகும். மாநிலம் முழுவதும் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின் நுகர்வு ஏப்ரல் 30-ம் தேதி 45.43 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது.
இதுவே இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும். இதற்கிடையில், கடந்த ஆண்டில் மொத்த மின் நுகர்வு அதிகரித்துள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், தற்போது ஏராளமானோர் மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2023-24-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 193 சார்ஜிங் நிலையங்களில் 35 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிர, கடந்த மார்ச் மாதம் லோக்சபா தேர்தல் பிரசாரம் நடந்தது. மேலும், ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மின் பயன்பாடு 11,096 கோடி யூனிட் இது போன்ற காரணங்களால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்த 2023-24 நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த மின் பயன்பாடு 11,096 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. இது 2022-23 நிதியாண்டில் மொத்த மின் நுகர்வான 10,354 கோடி யூனிட்களை விட 742 கோடி யூனிட் அதிகம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.