சென்னை: தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘சாட்ஜிபிடி’ பயிற்சி வகுப்பு, ஏப்., 3-ல், சென்னை கிண்டியில் நடக்கிறது. தொழில் முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு, ‘சாட்ஜிபிடி’ மூலம், தொழில் செயல்பாடுகளை மேம்படுத்தவும், செலவைக் குறைக்கவும், ஒரு நாள் பயிற்சி வகுப்பு, தமிழ்நாடு அரசின், ஏப்., 3-ல் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப தொடர்புடைய தரவுகளை எழுதுதல், ChatGPD உதவியுடன் சரியான முறையில் இலக்குகளை அமைத்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல், வாடிக்கையாளர்களுடன் உரையாடல்களை மேம்படுத்த AI கருவிகளைப் பயன்படுத்துதல், வணிக உத்திகளைத் துல்லியமாகக் கண்காணித்தல் மற்றும் ChatGPD மூலம் தொழில் முனைவோர் சவால்களுக்குத் தீர்வு காண்பது போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட ChatGPD தரவுகள், வழிகாட்டுதல்கள், WhatsApp தொடர்புகள் போன்றவற்றுடன் மின் புத்தகம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்திலும், 9360221280 மற்றும் 9543773337 என்ற எண்ணிலும் தெரிந்துகொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவுகள் அவசியம்.