சென்னை: சென்னை போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:- சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் பனகல் பூங்கா பகுதியில் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புக்கான கட்டுமானப் பணிகள் ஜே.ஒய்.எம். வெங்கட் நாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள திருமண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தியோசிக்கப்படுள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கட் நாராயண சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயண சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.
மேலும், அப்பகுதி மக்களின் வசதிக்காக தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம்., திருமண மண்டபம் வழியாக இரு திசைகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.