சென்னை: சென்னை கார் பந்தயம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார். அதில் அவர் கூறியதாவது:-

நான் பதிலளிக்கும் போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் இருப்பதில்லை. டெல்லியில் 3 கார்கள் மாறி அதிமுக அலுவலகம் சென்றதாக சொல்கிறார்கள். எடப்பாடிக்கு வாழ்த்துகள். முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ரூ’ போட்டு தமிழக பட்ஜெட் தொடங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ‘ரூ’ போட்டு அனைவரையும் அலற வைத்தவர் முதல்வர். அனைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என துணை முதல்வர் தெரிவித்தார்.