வேட்டமங்கலம்: தஞ்சாவூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியென அரசால் பெயர் பெற்ற பள்ளியான வேட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் கலந்து கொண்டார்.
தலைமை ஆசிரியர் சிவகனேசன் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். இதில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியை உடனிருந்து ஒருங்கிணைத்தனர். ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னதாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாலையில் பள்ளி குழந்தைகளின் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.