மதுரை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தலைமையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, விஜய்க்கு பின்னணியில் எம்ஜிஆர் மற்றும் அண்ணா படங்களுடன் பதாகை வைக்கப்பட்டிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகியுள்ளது.

சிலர், “சினிமாவிலும் அரசியலிலும் விஜய் எப்போதும் பிறரை நம்பியே இருக்கிறார்” என விமர்சிக்கின்றனர். குறிப்பாக, எம்ஜிஆர் மற்றும் அண்ணா புகைப்படங்களை தனது மாநாட்டு மேடையில் பயன்படுத்தியிருப்பதற்கு அதிமுக தரப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருவது தமிழகத்தில் புதிதல்ல. முன்னாள் தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைப்படத்திலிருந்து அரசியலுக்கே வருகை தந்து பெரும் வெற்றியை பெற்றனர். இந்நிலையில் விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் அரசியல் ஆர்வலர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.