மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், டிடிவி தினகரன் கருத்துக்கு பதிலளிக்காமல் இருப்பதே நல்லது எனவும், நடிகர் விஜய் அரசியல் பரிச்சை எழுத வேண்டும் என்றால் அனுபவம் உள்ளவர்களுடன் போட்டியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டமன்றத்தில் திமுக அரசு ஜனநாயகத்தைக் கொன்றுவிட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் உரை நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை. மூலதன செலவில் திமுக அரசுக்கு தெளிவான விளக்கம் இல்லை. தமிழகத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் எந்த ஒரு சிறந்த சாதனையும் செய்யப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

அவரது உரையில், “கரூர் சம்பவம் காவல்துறையின் கவனக் குறைவால் ஏற்பட்டது. திமுக அரசு மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது. 2026 தேர்தலில் மக்களாட்சி மலரும்,” எனவும் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் “நயினார் நாகேந்திரனின் கனவு பலிக்காது” என கூறியதற்கு பதிலாக உதயகுமார், “அத்தகைய வேடிக்கை பேச்சுகளுக்கு பதில் சொல்லி பெரிதாக்க வேண்டாம். விஜய் அரசியலில் இறங்க நினைத்தால் அனுபவம் உள்ளவர்களுடன் தான் பரிச்சை எழுத வேண்டும்” என்று விமர்சித்தார்.