சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3,645 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது ரூ.22.10 கோடி செலவில் இந்த ஏரியை சீரமைத்து மேம்படுத்த இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை சேப்பாக்கத்தில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, பூண்டி ஏரியில் நதி அருங்காட்சியகம் கொண்ட கட்டுப்பாட்டு மையம், பரங்கிமலை அலுவலகத்தில் சென்னை நதி பேரிடர் மீட்பு மையம், திருவள்ளூரில் பேரிடர் மேலாண்மை மையம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கட்டுப்பாட்டு அறைகள் ரூ. .13.90 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான மின்னணு ஒப்பந்தப் புள்ளிகளை நவ.11-ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீர்வளத்துறை பாலாறு நீர்ப்பிடிப்பு மண்டல மேற்பார்வை பொறியாளர் பொதுப்பணி திலகம் தெரிவித்துள்ளார்.