உதகை: உதகையில் எச்எம்பிவி வைரஸ் எதிரொலியாக முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.