புதுச்சேரியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சிக்குள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தனியாக இந்தக் கூட்டத்தை நடத்தியது பெரும் கவனத்தை ஈர்த்தது.

கூட்டத்தில் சுமார் நான்கு ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் ராமதாஸை மீண்டும் பாமக தலைவராக நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேடையில் அவர் பேசும்போது, “இது பணம் கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல, மக்கள் விருப்பத்தில் கூடிய கூட்டம்” என வலியுறுத்தினார்.
மேலும், 10.5 சதவிகித இடஒதுக்கீடு மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து அரசு விருப்பமிருந்தால் உடனே தீர்வு காணலாம் என்றும் தெரிவித்தார். இதன்மூலம் தனது அரசியல் பாத்திரத்தைத் தளராமல் தொடருவதாகச் சுட்டிக்காட்டினார்.
ஆனால் கூட்டத்தில் நடந்த சில காட்சிகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தின. ராமதாஸ் ஆதரவாளர்கள் “IF YOU ARE BAD I AM YOUR DAD” எனும் ஆங்கில வாசக பதாகைகளைக் காட்டியதால், இது அன்புமணியை குறிவைத்த நேரடி தாக்குத்தாலக அமைந்துள்ளது.