டெல்லி: மதுரை மெட்ரோ திட்டத்திற்கான மதிப்பீட்டு பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதா என திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திட்டத்தின் தற்போதைய நிலை, அனுமதி பெறுவதற்கான காலக்கெடு போன்ற விவரங்களையும் கேட்டுள்ளார்.

மற்ற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு விரைவான அனுமதி கிடைத்துள்ள நிலையில், மதுரை மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? சர்வதேச நிதியைப் பெறுவதற்கான தற்போதைய நிலை மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) வெளிப்படுத்திய ஆர்வத்தை திட்டத்தின் நிதித் திட்டமிடலுடன் ஒருங்கிணைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார்.