சென்னை: பெரும்பாலான கிராமப்புற வீடுகளில் இன்றளவும் சூரிய வெளிச்சம் வீடுகளுக்குள் வருவதற்காக ஒவ்வொரு அறையிலும் கூரையில் கண்ணாடிகள் பதித்து இருப்பதை பார்க்க முடியும்.. இதன் மூலம் சூரிய வெளிச்சம் தடையில்லாமல் வீட்டிற்குள் நுழைய முடியும்..
இப்பொழுது இதே முறையில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வருவதற்காக கூரைகளில் கண்ணாடிகளை தேவையான அளவுகளில் பொருத்தி கட்டுமானம் செய்யப்படுவதை பார்க்க முடிகின்றது. இவ்வாறு பொருத்தப்படும் கண்ணாடிகளை கூரையின் ஜன்னல்கள் என்று அழைக்கிறார்கள்.
ஸ்கை லைட்டுகள் ஜன்னல்களை விட நிலையான ஒளியை வீட்டிற்குள் கொண்டு வருகின்றன, ஏனெனில் ஜன்னல்களை யாராவது கடக்கும் பொழுது அல்லது ஏதாவது ஒரு பொருளை கொண்டு செல்லும் பொழுது ஏற்படும் வெளிச்ச தடை கூட இல்லாதவாறு இவை செயல்படுகின்றன
வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சர விளக்கின் மீது சூரிய ஒளி பிரதிபலிக்கும் போது, அது அறைக்கு அதிக வெளிச்சத்தை கொடுக்கிறது.. இந்த செயல் நடைபெறுவதற்கு சர விளக்கை இயக்க வேண்டிய அவசியமில்லை. அறையில் சூரியஒளி வெளிப்படக்கூடிய இடங்களில் கண்ணாடிகள், ஸ்கோன்கள் மற்றும் பளபளப்பான கேபினட்கள் போன்ற பிரதிபலிப்பு அம்சங்கள் என எவற்றை வேண்டுமானாலும் அமைக்கலாம்.
வீடுகளின் சுவற்றில் ஒரு பகுதியில் திறந்து மூடாதவாறு நிலையான ஜன்னல்களை பொருத்துவது மேலை நாடுகளைப் போலவே நம் நாட்டிலும் இப்போது பிரபலமாகி வருகின்றது. வீட்டினுள் வெளிச்சம் வருவதற்கு பயனுள்ள தீர்வாக இது இருக்கும்.
.குறிப்பாக வீட்டின் வெளிப்புற சுவர் பகுதிகளை இதுபோன்ற நிலையான கண்ணாடி தொகுதிகளைக் கொண்டு பொருத்துவதன் மூலம் தேவையான அளவு இயற்கை ஒளி வீட்டிற்குள் வருவதற்கு இது வழிவகை செய்கின்றது.
வீட்டிற்குள் நடப்பது வெளியில் தெரியாதவாறும் அதே சமயத்தில் வெளியில் நடப்பதும் வீட்டிற்குள் தெரியாதவாறும் வரும் கண்ணாடிகள் வெளியிலிருந்து வெளிச்சத்தை வீட்டிற்குள் தங்குதடையின்றி அனுப்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன…
ஒரு அறையின் நான்கு சுவர்களில் ஒரு சுவருக்கு பதிலாக கண்ணாடியாலான ஸ்லைடிங் கதவுகளைப் பொருத்துவது தென் இந்தியாவைத் தவிர மற்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. இப்பொழுது தென்னிந்தியாவிலும் இதுபோன்ற ஸ்லைடிங் கதவுகளை வீடுகளில் பொருத்திக் கொள்வதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சமையலறை மற்றும் குளியலறை சுவர்களுக்கு கண்ணாடி போன்று பிரதிபலிக்கக்கூடிய டைல்களை ஒட்டும் பொழுது அவை அறைக்குள் இருக்கும் வெளிச்சத்தை அதிகப்படுத்துகின்றன.
சமையலறை மற்றும் டைனிங் அறைக்கு நடுவில் இதுபோன்ற கண்ணாடியால் செய்யப்பட்ட தடுப்புகள் நிறுவலாம். அதேபோல் சுவர்களுக்கு ஒட்டப்படும் டைல்கள் மென்மையான வண்ணங்களில் இருந்தால் அவையும் அறைக்குள் இருக்கும் வெளிச்சத்தை அதிகப் படுத்திக் காட்டுவதற்கு ஒரு காரணியாக அமைகின்றன.
மெட்டாலிக் பேக்ஸ்பிளாஷ் டைல்கள் அதிக அளவு பிரதிபலிப்பு தன்மை கொண்டதாக இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி அதிகப்படியான ஒளியை வீட்டிற்குள் அனுமதிக்க முடியும்.