சென்னை: சிறு வணிகர்களுக்கான தொழில் உரிமக் கட்டணத்தை குறைத்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு திடீரென தொழில் மற்றும் வணிக உரிமக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர், செயல்தலைவர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் மீது அனைத்து தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுத்தார்.
அடித்தட்டு வணிகர்களின் பாதிப்பைத் தவிர்க்க, குறைந்தபட்சம் 1000 சதுர அடி பரப்பளவிற்கு உரிமக் கட்டணத்தை 500 சதுர அடியாகக் குறைக்க வேண்டும். 500 சதுர அடிக்கு குறைவான கடைகள், டீக்கடைகள், சிறு கடைகள், துரித உணவு விடுதிகள் போன்றவற்றின் வணிக உரிமக் கட்டணத்தை ரூ.1000 ஆக அறிவிக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியிருந்தோம். இதன் எதிரொலியாக தமிழக அரசு 500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு கொண்ட வணிகங்களுக்கான வருடாந்திர வணிக உரிமக் கட்டணத்தை ரூ. 1,200 என குறைத்து அறிவித்திருக்கின்றது.
அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம், தொழில் உரிமக் கட்டணம் செலுத்தி உரிமத்தைப் புதுப்பிக்க குறுகிய கால அவகாசம் உள்ளதால், கூடுதல் கட்டணம், அபராதம் ஏதுமின்றி வணிக உரிமங்களைச் செலுத்த மே 15 வரை கூடுதலாக 45 நாட்கள் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.