ஸ்ரீவில்லிபுத்தூர்: நடிகையும் அதிமுக பிரச்சார துணைச் செயலாளருமான கௌதமி திங்கள்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கௌதமியை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். ஆண்டாள் சன்னதி, பெரிய பெருமாள் சன்னதி, நரசிம்மர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் ஆண்டாள் அவதரித்த நந்தவனம் ஆகிய இடங்களில் கௌதமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “2026-ம் ஆண்டில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நியாயமான அரசு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஆண்டாள் தாயரிடமும் நான் அதையே கேட்டுக்கொள்கிறேன். திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ராஜபாளையம் தொகுதியின் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டு எனது பணியை சிறப்பாகச் செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். 2026 தேர்தலில் நான் போட்டியிடுவதா இல்லையா என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருக்கிறேன். புற்றுநோய் விழிப்புணர்வு, கல்வி போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது. தமிழகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்,” என்று அவர் கூறினார்.