சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேருவின் 136-வது பிறந்தநாள் விழாவையொட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நேருவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், பொதுச் செயலாளர்கள் தளபதி எஸ்.பாஸ்கர், காண்டீபன், எஸ்.ஏ.வாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரு தனது விண்வெளிப் புரட்சி மற்றும் பசுமைப் புரட்சி மூலம் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றினார். ஆனால் இன்று ஆளும் பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். நேரு இல்லாமல் இந்த தேசமே இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவர் மீதான திடீர் தாக்குதலுக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று கூறி, தன்னை எதிர்க்கட்சித் தலைவராக நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.