சென்னை : வரும் ஜூன் மாதத்திற்குள் மகளிர் உரிமை தொகை புதிய விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
ஜூன் 15-க்குள் மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே 1.10 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 வாங்கி வருகின்றனர். விடுபட்ட தகுதியான பெண்கள் மீண்டும் சேர்க்கப்பட்டு ரூ.1,000 அளிக்கப்பட இருப்பதாகவும் அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் புதிய விண்ணப்பம் ஜூன் 15க்குள் பெறப்பட்டு, ஜூலை மாதம் முதல் ரூ.1,000 அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குடும்பத் தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.