சென்னை: இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; நேற்று மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய “சக்தி” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நேற்று நள்ளிரவு 2330 மணிக்கு அதே பகுதிகளில் நிலவியது.

இது இன்று மேலும் தென்கிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் பலவீனமடைந்து 0830 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது.
இது துவாரகா (குஜராத்) க்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.