நியூயார்க்: கூகுளின் மென்பொருள் அடிப்படையிலான புரோகிராம் குறியீட்டில் 25 சதவீதம் செயற்கை நுண்ணறிவால் எழுதப்படுவதாக அவர் கூறினார். பிழை திருத்தம் மற்றும் சரிபார்க்கும் பணியை பொறியாளர்கள் செய்து வருகின்றனர் என்றார். தற்போதைய நிலவரப்படி, வழக்கமாக மேற்கொள்ளப்படும் சில அடிப்படை பணிகளுக்கு மட்டுமே கூகுள் இதனை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொறியாளர்கள் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்த முடியும் என கூகுள் கருதுவதாக தெரிகிறது. இது மென்பொருள் வடிவமைப்பு வேலைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நுழைவு நிலை குறியீட்டு வேலைகள் வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும், பொறியாளர்கள் தங்கள் பணியை திறம்படச் செய்வதற்கு AI உதவும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்புகின்றனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் AI தொழில்துறையில் பெரிய அளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
பத்து ஆண்டுகளில் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் AI மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.