சென்னை: சியோமி என்பது சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது பல்வேறு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்கிறது. அதன் பிராண்ட் போகோ 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2021 முதல் அதன் சொந்த சிறப்பு லோகோவுடன் இந்தியாவில் செயல்பட்டு வரும் போகோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், நிறுவனம் தற்போது இந்தியாவில் போகோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் பிரிவில் போன் வாங்க விரும்பும் பயனர்களைக் கருத்தில் கொண்டு போகோ இந்த போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

போகோ எம்7 பிளஸ் போனின் சிறப்பு அம்சங்கள் என்ன?
6.9-இன்ச் LCD டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
ஸ்னாப்டிராகன் 6S ஜெனரேஷன் 3 சிப்செட்
பின்புறத்தில் இரண்டு கேமராக்கள். பிரதான கேமராவில் 50-மெகாபிக்சல் உள்ளது 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
7,000mAh பேட்டரி
33 வாட்ஸ் சார்ஜிங் வேகம்
வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
5G நெட்வொர்க்
USB டைப்-சி போர்ட்
6GB / 8GB ரேம்
128GB சேமிப்பு
இந்த போன் அறிமுக விலை ரூ. 12,999-க்கு விற்கப்பட்டுள்ளது.