சென்னை: ஒன்பிளஸ் என்பது சீனாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. நிறுவனம் 2013-ல் தொடங்கப்பட்டது. ஒன்பிளஸ் 13 தொடர் குவால்கம் செயலியில் இயங்குகிறது. இந்த பிரீமியம் மாடல் சீரிஸ் போன் இந்தியாவில் குளிர்கால அறிமுகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் 4 வருட ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட்களையும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் பெறும் என்று உறுதியளித்துள்ளது. இது AI அம்சங்களையும் கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
6.82-இன்ச் LTPO QHD+ டிஸ்ப்ளே
ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
மூன்று பின்புற கேமராக்கள். இது 50 மெகாபிக்சல் சோனி LYT808 சென்சார் பிரதான கேமராவாக உள்ளது
32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
USB Type-C போர்ட்
6,000mAh பேட்டரி
இந்த போனில் 100 வாட் சார்ஜர் உள்ளது
இந்த ஃபோனில் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது
இதில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது
இந்த போன் 12 ஜிபி ரேம் / 256 ஜிபி சேமிப்பு, 16 ஜிபி ரேம் / 512 ஜிபி சேமிப்பு, 24 ஜிபி ரேம் / 1 டிபி சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது
இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது
இதன் விலை ரூ.69,999 முதல் தொடங்குகிறது.
ஒன்பிளஸ் 13ஆர் மாடல் போன் விலை ரூ. 42,999 முதல் ஆரம்பமாகிறது.