ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய மேக்ஸி-ஸ்கூட்டர் மாடலான ஜூம் 160 ஜனவரி 2025இல் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஹீரோ நிறுவனத்தின் பிரீமியம் ஸ்கூட்டர் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள முதன்மையான முயற்சியாகவும், பலரால் எதிர்பார்க்கப்பட்ட மாடலாகவும் மாறியுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்களிடம் இந்த ஸ்கூட்டருக்கான வாகன விநியோகம் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில், ஜூம் 160 மாடல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2025 மாத இடையே வாடிக்கையாளர்களை சென்றடையத் தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அதுவரை, முன்பதிவு செய்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ள நுகர்வோர் வெறுமனே காத்திருக்கும் நிலை தொடர்கிறது.
ஸ்போர்ட்டி தோற்றம், மேக்ஸி ஸ்கூட்டருக்கு ஏற்றவாறு வசதிகள், பவர் புல்லிங் என பல தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த மாடல் வந்துள்ளது. யாமஹா ஏரோக்ஸ் மற்றும் அப்ரிலியா SR160 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இது வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஸ்கூட்டர், வெளியீட்டுக்குப் பிறகும் சந்தையில் சிறந்த வரவேற்பைப் பெறும் என ஹீரோ மோட்டோகார்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.