தமிழகத்தில் மேலும் இரண்டு நகரங்களில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. தற்போது சேலம், விழுப்புரம், தஞ்சை மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கையாக மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப சூழலை செயல்படுத்தும் நோக்கத்தில் மினி டைடல் பார்க்ஸ் உருவாக்கப்படுகிறது.
இதன் மூலம் கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைக்கப்படுவதால் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
கோவை, மதுரை, திருச்சியில் மட்டும் ஐடி நிறுவனங்கள் உள்ளதால், மாநிலம் முழுவதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலையை மாற்ற தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளதால் இளைஞர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.