ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்களானது மீடியாடெக் டிமென்சிட்டி 7300-எனர்ஜி சிப்செட்கள் மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய AMOLED டிஸ்ப்ளே, 50MP டிரிபிள் ரியர் கேமரா யூனிட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
ஒப்போ ரெனோ 12 5ஜி மற்றும் ரெனோ 12 ப்ரோ 5ஜி விவரக் குறிப்புகள்: ஒப்போ ரெனோ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200nits பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஷீல்டு உடன் 6.7-இன்ச் FHD+ (1080 x 2412 பிக்சல்ஸ்) குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கோட்டிங் உடன் வருகிறது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 7300-எனர்ஜி SoC மற்றும் 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியிலான 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்க ஆதரவும் கிடைக்கிறது. இந்த போன்கள் ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14.1 மூலம் இயங்குகின்றன. மேலும், இந்நிறுவனம் மூன்று வருட ஓஎஸ் அப்டேட்களையும் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
மேலும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் AI சம்மரி, AI ரெக்கார்ட் சம்மரி, AI கிளியர் வாய்ஸ், AI ரைட்டர் மற்றும் AI ஸ்பீக் உள்ளிட்ட AI அம்சங்களுடனும், AI பெஸ்ட் ஃபேஸ் மற்றும் AI ஏரேர்2.0 உள்ளிட்ட AI கேமரா அம்சங்களுடனும் வருகின்றன. ஒப்போ ரெனோ 12 ப்ரோ ஆனது 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் கொண்ட OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் கொண்டுள்ளது. மற்றும் செல்ஃபிக்களுக்காக 50 மெகாபிக்சல் ஃபிராண்ட் கேமரா கொண்டுள்ளது. ஒப்போ ரெனோ 12 ஆனது 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. மற்றும் செல்ஃபிக்களுக்காக 32 மெகாபிக்சல் ஃபிராண்ட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒப்போ ரெனோ 12 ஸ்மார்ட்போனில் இணைப்பு விருப்பங்களாக 5ஜி, புளூடூத் 5.4, IR பிளாஸ்டர் மற்றும் Wi-Fi 6 ஆகியவை அடங்கும். மேலும் IP65-மதிப்பிடைக் கொண்டுள்ளன.
விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:
ஒப்போ ரெனோ 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு வகை ரூ.36,999 விலையிலும் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பு வகை ரூ.40,999 விலையிலும் கிடைக்கும். இது ஸ்பேஸ் பிரவுன் மற்றும் சன்செட் கோல்ட் வண்ணங்களில் ஜூலை 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஒப்போ ரெனோ 12 5ஜி ஆனது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு வகை ரூ.32,999 விலையில் கிடைக்கும். இது ஆஸ்ட்ரோ சில்வர், மேட் பிரவுன் மற்றும் சன்செட் பீச் வண்ணங்களில் ஜூலை 25 முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஒப்போ ரெனோ 12 ஸ்மார்ட்போனை ரூ.4,000 உடனடி தள்ளுபடி விலையிலும், ஒப்போ ரெனோ 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.3,500 தள்ளுபடி விலையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் வாங்கலாம்.