வங்கிச் சேவைகளை மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் ஏடிஎம்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், அருகிலுள்ள ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்க இயல்கிறது. இதனால் மக்கள் அதிகம் பயன் அடைகிறார்கள். ஆனால் சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, பணம் இயந்திரத்தில் சிக்கிக் கொள்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

உங்கள் பணம் ஏடிஎம்மில் சிக்கிக் கொண்டாலும், அக்கவுண்டில் இருந்து தொகை கழிக்கப்பட்டாலும் பயப்படத் தேவையில்லை. சில நேரம் காத்திருந்தால், சர்வர் பிரச்சனை சரியானதும் பணம் வெளியே வரும். அப்படி நடக்கவில்லை என்றால், பரிவர்த்தனை சீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். பொதுவாக, வங்கி இந்த பிரச்சனையை 7 வேலை நாட்களுக்குள் சரி செய்து விடும். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, 45 நாட்களுக்குள் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் வாடிக்கையாளர் இழப்பீடு பெறலாம்.
பல நேரங்களில் வங்கிகள் 24 மணி நேரத்திற்குள் பணத்தை திருப்பித் தருகின்றன. அதற்காக பரிவர்த்தனை சீட்டு மிகவும் முக்கியமான சான்றாக இருக்கும். வங்கியின் சேவையிலிருந்து தீர்வு கிடைக்கவில்லை என்றால், அருகிலுள்ள கிளைக்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். அங்கு ஒரு கண்காணிப்பு எண் வழங்கப்படும். அதன் மூலம் உங்கள் புகார் எந்த நிலைமையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எனவே, ஏடிஎம்மில் பணம் சிக்கினால் பீதியடையாமல் சற்றே காத்திருக்க வேண்டும். பிரச்சனை நீடித்தால் உடனடியாக வங்கி சேவையுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான தீர்வை அளிக்கும் நடைமுறையாகும்.