நியூயார்க்: தற்போது இந்தியாவில் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன, அதாவது மும்பையில் பிகேசி மும்பை மற்றும் டெல்லியில் டிஎல்எப் சாகேட். இந்த சூழலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் விற்பனை உலக அளவில் அதிகரித்துள்ளது. அதனால் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. நடப்பு காலாண்டில் இந்தியாவில் விற்பனை மற்றும் வருவாய் அதிகரித்துள்ளது.
ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. “அனைத்து பிராந்தியங்களும் ஐபோன் விற்பனையில் வளர்ச்சியைக் கண்டுள்ளன. இது எங்களின் செப்டம்பர் காலாண்டு வருவாய்க்கான சாதனையாகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலை நிலவுகிறது.
இந்தியாவில் எங்களுக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிக்கிறது,” என்று டிம் குக் கூறினார். இந்தியாவில் புதிய ஆப்பிள் ஸ்டோர் அமைப்பது குறித்த வதந்திகள் நீண்ட நாட்களாகவே உலவி வருகின்றன. தற்போது டிம் குக் அதை உறுதி செய்துள்ளார். இது எங்குள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும், இது பெங்களூரு, புனே, டெல்லி-என்சிஆர் மற்றும் மும்பையில் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.