கோடையில் பல பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருப்பதால், ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. உங்கள் வீட்டு ஏசி தொடர்ந்து சிறப்பாக வேலை செய்ய, அடிப்படை பராமரிப்பு அவசியம். வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், மின் செலவையும் குறைக்கவும் சில எளிய வழிகள் உள்ளன.

முதலில், ஏர் ஃபில்ட்டரை சுத்தம் செய்தல் மிகவும் முக்கியமானது. தூசி மற்றும் அழுக்கு ஏர் ஃபில்ட்டரை அடைத்து காற்றோட்டத்தை குறைக்கும். இது ஏசியை அதிக முயற்சியுடன் வேலை செய்ய வைக்கும். ஆகவே, 15–20 நாட்களுக்கு ஒருமுறை ஏர் ஃபில்ட்டரை சுத்தம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக, அவுட்-டோர் யூனிட்டை தூசியின்றி வைத்திருக்க வேண்டும். வெளியிலுள்ள யூனிட்டில் தூசி, இலை மற்றும் குப்பைகள் கூடுமானால், காற்றின் சுழற்சி பாதிக்கப்படும். இது குளிர்ச்சியை குறைக்கும். அந்த பகுதியை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.அதன் பிறகு, வருடத்திற்கு இரண்டு முறை டெக்னீசியன் மூலம் முழு சர்வீஸ் செய்வது நல்லது.
ஏசியின் ரெஃப்ரிஜிரண்ட் அளவு, லீக் மற்றும் மின் இணைப்புகள் ஆகியவை சரிவர இருப்பதற்காக இது தேவை.ஏசியின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரிக்கு மத்தியிலாக வைத்தால் திறமையாக வேலை செய்யும். இதனால் மின் செலவு குறையும். இரவில் டைமர் அல்லது ஸ்லீப் மோட் பயன்படுத்துவதும் நன்மை தரும்.
இன்னொரு முக்கிய அம்சம், ஏசி இயங்கும்போது வித்தியாசமான சத்தங்கள் வந்தால் அல்லது துர்நாற்றம் ஏற்பட்டால், உடனே பராமரிக்க வேண்டும். இது ஏசியின் உட்பகுதியில் ஏற்பட்ட சேதம் அல்லது பூஞ்சை காரணமாக இருக்கலாம்.இந்த எளிய வழிகளை பின்பற்றி உங்கள் ஏசியை கோடையில் சிறப்பாக இயக்கி குளிர்ச்சியான சூழலை உருவாக்கலாம்.