ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலரும் இசை வெளியீட்டு விழாவும் நாளை ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகள் முழுசாகும் நிலையில், டிரைலர் எந்த நேரத்தில் வெளியாகும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்த விழாவில் ரஜினிகாந்த் என்ன பேசப்போகிறார் என்பதற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கடந்த நிகழ்வுகளில் அவர் பேசிய சில கருத்துகள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டதோடு, சிலர் நடிகர் விஜய்யை குறிவைத்த பேச்சுகள் என்றும் விமர்சனம் செய்திருந்தனர். இதனால் இம்முறை அவரது பேச்சில் யாரும் நிழலாக வருவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இது ரஜினி – லோகேஷ் கூட்டணியில் முதல் படம். லோகேஷ் ஒரு தீவிர கமல்ஹாசன் ரசிகர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. ரஜினிகாந்திடம் கதை சொல்லும் முன், “நான் பெரிய கமல் சார் ரசிகன்” என்று கூறியதாகவும், அதற்குப் பிறகு தான் கதை விவரங்களை எடுத்துரைத்ததாகவும் லோகேஷ் பகிர்ந்திருக்கிறார்.
இந்த தகவலை ரஜினி தனது உதவியாளர்களிடம் டப்பிங் பணிக்குப் பிறகு பகிர்ந்ததும், “இசை வெளியீட்டு விழாவில் உங்களை பார்க்கிறேன்” என கூறியதும், எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில் உள்ளது. இந்நிலையில், “முதலில் நானே பெரிய கமல் ரசிகர், அதற்குப் பிறகு தான் இதெல்லாம்” என்று ரஜினி பேசக்கூடும் என்பதே பலரின் ஊகமாக மாறியுள்ளது.
கூலி படத்தின் ஹைபை பல நிலைகளில் தூண்டும் வகையில் உருவாக்கியுள்ள அணிமுகத்ராஸ் டீம், இசை வெளியீட்டு விழாவையும் ரசிகர்களுக்குப் பண்டிகையாக மாற்ற தயாராகி வருகிறது. ரஜினியின் Trademark Speech இந்த விழாவிலும் நிச்சயமாக ஹைலைட் ஆகும் என்பது உறுதி.