இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் லிமிடெட் (IRCTC) நேபாளத்திற்கு ஒரு மலிவு விலையில் சர்வதேச பயண தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொகுப்பை ‘இமயமலையின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அழகிய இடம் தம்பதிகள், குடும்பங்கள் மற்றும் தனி பயணிகளுக்கு ஏற்றது. நேபாளத்தின் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகள் மற்றும் ஆன்மீக அடையாளங்களை சுற்றிப் பார்க்க ஐஆர்சிடிசி (IRCTC) டூர் பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த “Mystical Nepal Package Ex Mumbai” (WMO 018) என பெயரிடப்பட்ட டூர் பேக்கேஜ், நேபாளத்தின் சிறந்த இடங்களை வெறும் 6 பகல்கள் மற்றும் 5 இரவுகளில் உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் திட்டமிடப்பட்ட பயணம் ஏப்ரல் 14 ஆம் தேதி புறப்பட்டு ஏப்ரல் 19 ஆம் தேதி முடிவடைகிறது. முதல் இடத்தைத் தவறவிட்டவர்களுக்கு, மே 7 முதல் மே 12 வரை மற்றொரு பிளான் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் மும்பையிலிருந்து காத்மாண்டுவுக்கு விமானத்தில் பயணம் தொடங்கி, இந்த தனித்துவமான இடங்களை அனுபவிக்கப்போகின்றனர். இருப்பினும், இருக்கைகள் குறைவாக இருப்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த சுற்றுப்பயணம், பசுபதிநாத் கோயில், பவுதநாத் ஸ்தூபி, சுயம்புநாத் ஸ்தூபி, மற்றும் புனித மனோகம்னா கோயில் போன்ற ஆன்மீக மற்றும் வரலாற்று அடையாளங்களைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குகிறது. அதோடு, தர்பார் சதுக்கம், திபெத்திய அகதிகள் மையம், சூரங்கோட் பார்வைத் தளம், அழகிய பிந்தியபாசினி கோயில் மற்றும் தேவியின் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடும் அனுபவம் எளிதாக கிடைக்கும்.
IRCTC, தனது பயணத்திற்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய ஒரு வசதியான அனுபவத்தை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படும். கூடுதலாக, பயணக் காப்பீடு சேர்க்கப்பட்டுள்ளது. காத்மாண்டு மற்றும் போகாரா பகுதிகளில் தரமான ஹோட்டல்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
IRCTC இந்த சர்வதேச பயணத்தை மிகவும் மலிவான விலையில் நிர்ணயித்துள்ளது, பட்ஜெட் உணர்வுள்ள பயணிகளுக்கு சிறந்த தெரிவாக அமைகிறது. அடிப்படை கட்டணம் ₹46,600 முதல் தொடங்குகிறது. தனியாக தங்க விரும்பும் பயணிகளுக்கு ₹54,930 ஆகும். அறைகளைப் பகிர்ந்து கொள்வவர்களுக்கு, இரு பேர் தங்கும்போது ₹46,900 மற்றும் மூன்று பேர் தங்கும்போது ₹46,600 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.