நிலையான வைப்புத் தொகைக்கு (FD) 8%க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்கும் 10 இந்திய வங்கிகள் மற்றும் அவற்றின் வட்டி விகிதங்களைப் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பந்தன் வங்கி மற்றும் எஸ்பிஎம் பேங்க் இந்தியா போன்ற வங்கிகள், நிலையான வைப்புத் தொகைகளுக்கு 8%க்கும் மேலான வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. நிலையான வைப்புத் தொகைகள் (FD) முதலீட்டாளர்களுக்கு நம்பகமான, நிலையான மற்றும் நீண்ட கால முதலீட்டு விருப்பங்களையும், வருமானத்தையும் வழங்குகின்றன. வட்டி விகிதங்கள், டெபாசிட் செய்யும் தொகை மற்றும் கால அளவைப் பொறுத்து வங்கியின்படி மாறுபடலாம். எனவே, FD கணக்கை தொடங்குவதற்கு முன்பு, வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

பல இந்திய வங்கிகள் நிலையான வைப்புத் தொகைக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இவை: நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, எஸ்பிஎம் வங்கி இந்தியா, பந்தன் வங்கி மற்றும் டிசிபி வங்கி.
இந்த வங்கிகள் மற்றும் அவற்றின் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் தொடர்பாக விரிவாக பார்க்கும் போது, ஒவ்வொரு வங்கியிலும் கால அளவுக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். மேலும், இந்த வங்கிகளில் நிலையான வைப்புத் தொகைகளை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் திறக்க முடியும். KYC விதிமுறைகளை முடித்துப் பிறகு, வங்கியினை நேரடியாக சென்று FD கணக்கைத் தொடங்க முடியும். 100 ரூபாய்க்கும் குறைந்த தொகையிலான FD கணக்குகளை பல வங்கிகள் திறக்கின்றன, மேலும் குறைந்த காலம் (7 நாட்கள்) முதல் அதிக காலம் (10 ஆண்டுகள்) வரை வைப்புகள் திறக்க முடியும்.