விருதுநகர்: பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது என்று உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் தீபாவளிக்கான இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர் விபத்துகளால் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப்பொருளுக்குத் தடை உள்ளிட்ட காரணங்களாலும் இந்த ஆண்டு 30 சதவீதம் அளவுக்கு பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.