தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும், குறையும். நேற்றுமுன்தினம் பவுனுக்கு ரூ.1,440 அதிகரித்து, புதிய அதிகபட்சமாக ரூ.66,400ஐ எட்டியது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.80 குறைந்து, பவுன் ரூ.8,220 ஆகவும், பவுன் ரூ.640 குறைந்து, ரூ.65,760 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 24 காரட் தூய தங்கம் ஒரு பவுன் ரூ.71,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.112 ஆக இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக உள்ளது.