தஞ்சை: தஞ்சை மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு தஞ்சை மாவட்ட வணிக சங்க பேரவை நிறுவனத் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் நசீர் மாவட்ட பொருளாளர் ராஜா நகரத் தலைவர் சதீஷ் துணைத் தலைவர் முகமது மசூத் ,நகரச் செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய தலைவர் சந்தானகுமார் செயலாளர் கணேசன், பொருளாளர் சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் முத்தையன், குமாரசாமி சதீஷ்குமார் ,அசோகன் ,இளங்கோவன் ,ராஜா, துணை செயலாளர்கள் தினேஷ், ஜெகதீஷ் ,மோகன், சாந்திப்பிரியா, கீர்த்திகா ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் தமிழக மின்சார வாரியம் மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஜி எஸ் டி வரி வசூல் உயர்வுக்கு ஏற்ப அவ்வபோது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வணிகர்களுக்கு நல வாரியத்தின் மூலம் உதவிட வேண்டும் .என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.