ஒரு பவுன் ரூ.120 அதிகரித்து ரூ. 57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது மாறி, ஏற்ற இறக்கமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்தது. அதன்படி, ரூ. 15 கிராமுக்கு ரூ. 7,150 அதிகரித்து பவுன் ரூ.120 அதிகரித்து ரூ. 57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுத்த தங்கம் ரூ.62,400-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 1 லட்சமாக இருந்தது.