இந்திய வருமான வரித்துறையின் புதிய உத்தரவு, பல்வேறு PAN கார்டுகளை வைத்திருக்கும் நபர்களை நேரடியாகப் பாதிக்கக்கூடியது. ஆதார் எண் இல்லாமல், ஒரே நபர் பல்வேறு PAN எண்களைப் பெற்றிருப்பதை தவிர்க்கும் நோக்கில், இது ஒரு முக்கிய கட்டுப்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதார் விண்ணப்பத்தின் போது வழங்கப்பட்ட ஆதார் என்ரோல்மென்ட் ID
-யைப் பயன்படுத்தி PAN எண் பெற்றவர்கள், அதனை உண்மையான ஆதார் எண்ணுடன் இப்போது அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

இந்த அப்டேட் பணியை வரும் டிசம்பர் 31, 2025-க்குள் முடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில், அந்த PAN எண்ணுகள் டீ-ஆக்டிவேட் செய்யப்படும். இது வருமான வரி தாக்கல் மற்றும் பொருளாதாரச் சேவைகளில் பல தடைகளை ஏற்படுத்தக்கூடும். அரசு, வரி ஒழுங்கையும், அடையாள சரிபார்ப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, ஆதார் மற்றும் PAN ஐ இணைப்பதன் மூலம் வரி ஏய்ப்புகளை தடுப்பதுடன், வரி செலுத்துவோரின் பதிவுகளும் துல்லியமாக நிரூபிக்கப்படும். இது, டிஜிட்டல் அடையாள அடிப்படையில் இந்திய பொருளாதார அமைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகவும் கருதப்படுகிறது.
ஆதாரை சரியான நேரத்தில் அப்டேட் செய்ய தவறினால், பலவிதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். உங்களுடைய PAN எண்ணை ஆதாருடன் இணைக்காதபட்சத்தில், அது செயலிழக்கலாம். இதன் விளைவாக வருமான வரி தாக்கல் செய்ய முடியாது, உங்கள் வங்கி கணக்குகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படும்.
இந்த அப்டேட்டைச் செய்வதற்கான நடைமுறை மிக எளிமையானது. வருமான வரித்துறையின் e-ஃபைலிங் இணையதளத்தில் உங்களது PAN விவரங்களை உள்ளிட்டு நுழைக. பின்னர் “Link Aadhaar” என்பதை தேர்ந்தெடுத்து, உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். OTP மூலம் சரிபார்த்துவிட்டு கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
முன்னதாக, ஜூன் 30, 2023-க்குள் PAN – ஆதார் இணைப்பை செய்ய வேண்டிய கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை தவறவிட்டவர்கள் இப்போது சிறிய அபராத கட்டணத்துடன் இணைப்பை மேற்கொள்வது அவசியமாகும்.
இந்த நடவடிக்கை, எதிர்கால வரி தாக்கல்களில் தடையில்லாமல் செயல்படவும், உங்கள் நிதி சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சீராக செல்லவும் வழிவகுக்கும். எனவே, இப்போது உங்களுடைய ஆதார் எண்ணை, PAN கார்டுடன் இணைத்து உங்களின் அடையாளத்தை பாதுகாப்பதும், சட்டபூர்வமான வரி கடமைகளை மேற்கொள்ளவும் தயாராக இருங்கள்.