தொழில் அதிபர் அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த சில நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி பவர், அதானி எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சரிந்துள்ளன.
நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் சமீபத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் 10 சதவீதம் சரிந்தது. அதேபோல அதானி போர்ட்டின் பங்கு விலையும் 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. அதானி பவர் 13 சதவீதமும், அதானி எனர்ஜி 20 சதவீதமும் சரிந்துள்ளன. அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் பங்குகளும் சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளன.
குற்றச்சாட்டுகள் மற்றும் பங்குச் சரிவு ஆகியவை அதானி குழுமத்தின் சந்தை நிலையை கவனத்தை ஈர்த்துள்ளன.