பர்சனல் லோன்கள் இன்று இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படும் நிதி உதவிப் போக்காக மாறிவிட்டன. மருத்துவ செலவுகள், திருமண செலவுகள், வீட்டு நிர்மாணப் பணிகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அடமானம் இல்லாமல் பணம் பெறுவதற்கான வசதியாக இது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் நிறுவனமும் பர்சனல் லோன் வழங்கும் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.

இந்த நிறுவனத்தின் பர்சனல் லோனை பெற, கடன் பெறுபவர் 21 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத வருமானம் குறைந்தபட்சம் ₹20,000 இருக்க வேண்டும். நிலையான வருமானம் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் புரியும் நபர்கள் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். கூடுதலாக, சிறந்த கிரெடிட் ஸ்கோர் (750 மேல்) இருக்கும்போது குறைந்த வட்டியில் கடன் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
வட்டி விகிதம் வருடத்திற்கு 10% முதல் 28% வரை இருக்கக்கூடும். இது, கடன் பெறுபவரின் நிதி நிலை, வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். பர்சனல் லோன் அதிகபட்சமாக ₹40 லட்சம் வரை வழங்கப்படும். கடன் திருப்பிச் செலுத்தும் கால அவகாசமாக 7 ஆண்டுகள் வரை பெறலாம். ப்ராசசிங் கட்டணம் சுமார் 4% வரையில் வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்ப முறை மிகவும் எளிமையானதாக உள்ளதால், இதை ஆன்லைனில் அல்லது நேரடியாக கிளையில் சமர்ப்பிக்க முடியும். இணையத்தில் ‘Apply Now’ பட்டனை கிளிக் செய்து மொபைல் எண், OTP, தேவையான ஆவணங்கள் உள்ளிட்டவை பதிவேற்றுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடன் நிலை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்த்து வழிகாட்டல்களைப் பெறலாம்.