சென்னை: சென்னையில் தங்க நகை விலை நேற்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57 ஆயிரத்திற்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
8-ம் தேதிக்கு பிறகு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.58,280 ஆக இருந்தது. இதையடுத்து தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் தங்க நகை விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57 ஆயிரத்திற்கு விற்பனையானது.
ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.7,125-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தூய தங்கம் ஒரு பவுன் ரூ.62,184 ஆக இருந்தது. இதேபோல் வெள்ளியின் விலையும் ரூ. 1 கிராமுக்கு ரூ. 100 ஆகவும், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 1,000 உயர்ந்து ரூ. 1 லட்சமாகவும் உள்ளது.