ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 11 நாட்கள் தொடர்ந்து சரிவை சந்தித்த நிலையில், நேற்று ஆகஸ்ட் 21ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அப்போது 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,230க்கும், ஒரு சவரன் ரூ.73,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி தங்கம் விலையில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.9,215க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.73,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,620க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.60,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைவதால் முதலீட்டாளர்கள் மற்றும் நகை பிரியர்கள் வாங்கும் ஆர்வத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வெள்ளி விலை மட்டும் சிறிய அளவில் உயர்வு கண்டுள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.128க்கும், ஒரு கிலோ ரூ.1,28,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தங்கத்தில் சரிவு ஏற்பட்டாலும் வெள்ளியில் சிறிய உயர்வு சந்தை நிலவரத்தை சற்றே சமநிலைப்படுத்தியுள்ளது.