வங்கிகளில் கடன் பெறுதல், அடமான மீட்பு, பணம் செலுத்தல் மற்றும் பெறுதல் போன்ற முக்கிய பணிகள் தினமும் நடைபெறுகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. எனவே, வங்கிகளின் வேலை நாட்கள் குறித்த தகவல் மக்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், வழக்கமான இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளான ஆகஸ்ட் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இத்துடன், ஞாயிற்றுக் கிழமைகளான ஆகஸ்ட் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய நாட்களிலும் வங்கி சேவைகள் கிடையாது. எனவே இந்த நாட்களில் தேவையான பணிகளை முடித்துவிடுவது சிறந்தது.
சில மாநிலங்களில் உள்ளூர் திருநாள்களை முன்னிட்டு கூடுதல் விடுமுறைகளும் அறிவிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 8 அன்று சிக்கிம் மாநிலத்தில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12 அன்று ரக்ஷா பந்தன் தினமாக இருப்பதால், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
மேலும், ஆகஸ்ட் 15 அன்று தேசிய விடுமுறை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். ஆகஸ்ட் 16 அன்று பார்சி புத்தாண்டு காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வங்கி விடுமுறை இருக்கலாம். ஆகஸ்ட் 26 அன்று ஜன்மாஷ்டமி தினத்தையொட்டி டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படலாம்.