சென்னை: தங்கம் விலை ரூ. 320 குறைந்து ஒரு பவுன் ரூ. 63,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக, பிப்ரவரி 11-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டது முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 64,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 12-ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்து ரூ. 63,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் ரூ. 320 குறைந்து ஒரு பவுன் ரூ. 63,840 மற்றும் ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து ரூ. 7,980-க்கு விற்பனையானது. 24 காரட் தூய தங்கம் ஒரு பவுண்டுக்கு ரூ. 69,640-க்கு விற்கப்பட்டது.