அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையின் மத்தியில், இந்தியா ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இறக்குமதி வரிகளின் குறைப்பினை அறிவித்துள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் வருமான வரி உள்ளிட்ட பல திட்டங்கள் வரவேற்கப்பட்டன. இதன் கீழ், ஹார்லி-டேவிட்சன் போன்ற அமெரிக்க பிராண்டுகளின் மோட்டார் சைக்கிள்களுக்கு மீது இறக்குமதி வரிகள் குறைக்கப்பட உள்ளது. 1,600 சிசி வரை கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீது 50% இறக்குமதி வரி, 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
1,600 சிசி மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 50% வீதமாக இருந்த வரி, இப்போது 30% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், செமி-நாக் டவுன் (SKD) கருவிகளுக்கான இறக்குமதி வரி 25% இருந்து 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாக நாக் டவுன் (CKD) யூனிட்களுக்கு இப்போது 15% இருந்து 10% வரி விதிக்கப்படும்.
இந்த வரி குறைப்புகள் இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களின் விலையை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இந்த பைக்குகளை வாங்கக்கூடியதாக அமையும். இது பிராண்டின் விற்பனை மற்றும் சந்தை பங்குகளை அதிகரிக்க வழி காட்டும்.இந்த வரி குறைப்புகள் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் நல்லெண்ணத்தை ஊக்குவிக்கவும், இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பட்ஜெட்டின் கீழ், மக்களுக்கு கூடுதல் நன்மைகள் வழங்கப்படும்.