தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் (NPCI) ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ (UPI) ஐடிகளை ரத்து செய்ய உள்ளது. இதன் காரணமாக, செயல்படாத செல்போன் எண்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த முடியாது. வங்கி கணக்குடன் தொடர்புடைய செல்போன் எண் செயல்படாத நிலையில் இருந்தால், அந்த யுபிஐ ஐடி செயலிழக்கும் அபாயம் உள்ளது.

செல்போன் எண்களை மாற்றிய பிறகும், அதை வங்கியில் புதுப்பிக்காமல் இருப்பவர்கள் கூட இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள். மேலும், மற்ற நபர்களுக்கு மாற்றப்பட்ட அல்லது மீண்டும் வழங்கப்பட்ட செயல்படாத எண்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால், NPCI இந்த நடவடிக்கையை எடுக்கிறது. இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
செயல்படாத எண்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவை வேறு நபர்களின் வசம் செல்லும் போது, உங்கள் யுபிஐ ஐடி தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் செயல்பாட்டில் இல்லையெனில், உடனடியாக அதை புதுப்பிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் இந்த அபாயத்திலிருந்து தங்களை பாதுகாக்க, தங்களது தற்போதைய செயல்படும் செல்போன் எண்களை வங்கியில் பதிவு செய்ய வேண்டும். உங்கள் செல்போன் எண் செயல்படாத நிலையில் இருந்தால், புதிய எண் வாங்கி அதை வங்கியில் புதுப்பிக்க வேண்டும்.
UPI ஐடிகளை ரத்து செய்யும் இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மோசடிகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செயல்படாத செல்போன் எண்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், பயனர்களின் பணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் NPCI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
எனவே, ஏப்ரல் 1க்குள் உங்கள் வங்கியில் உங்கள் தற்போதைய செயல்படும் செல்போன் எண்ணை புதுப்பித்தது உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த மாற்றத்தால் உங்கள் யுபிஐ சேவை தொடரும், இல்லையெனில் உங்கள் யுபிஐ ஐடி ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.