கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பில்லிங் சைக்கிள் என்பது முக்கியமானது. ஆனால் பலர் அதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறுகள் செய்கிறார்கள். பில்லிங் சைக்கிள் உங்கள் செலவுகள், பேமெண்ட் கண்காணிப்பு மற்றும் வட்டி தவிர்ப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பில்லிங் சைக்கிள் என்பது நிதி நிறுவனம் உங்கள் கிரெடிட் கார்டில் நடைபெறும் அனைத்து செலவுகளையும் பதிவு செய்யும் 28 முதல் 31 நாட்கள் கொண்ட கால அளவாகும். இந்த காலத்தின் முடிவில், உங்கள் கிரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்ட் உருவாக்கப்படும். இதில், நீங்கள் எடுத்துக் கொண்ட கேஷ் அட்வான்ஸ், EMI, கட்டணம், குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய தொகை, மொத்த தொகை மற்றும் டியூ தேதி போன்றவை குறிப்பிடப்படும்.
ஸ்டேட்மெண்ட் தேதி என்பது பில்லிங் சைக்கிளின் முடிவு நாள். டியூ தேதி என்பது அந்த ஸ்டேட்மெண்டில் குறிப்பிடப்படும் தொகையைச் செலுத்த வேண்டிய கடைசி நாள். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள காலம், 12 முதல் 21 நாட்கள் வரை இருக்கும் வட்டி இல்லா காலமாக வழங்கப்படும். இந்த காலத்துக்குள் நீங்கள் பேமெண்ட் செய்துவிட்டால், வட்டி செலுத்த தேவையில்லை.
பில்லிங் சைக்கிளின் ஆரம்பத்தில் பெரிய செலவுகளைச் செய்வது, அதிக நாள் வட்டி இல்லா காலம் கிடைக்கும் வகையில் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை உங்கள் சைக்கிள் இருந்தால், ஜூலை 1ல் நீங்கள் செய்யும் செலவுகள் ஆகஸ்ட் 20 வரை டியூ ஆகாது. இதனால் 50 நாட்கள் வரை வட்டி இல்லாமல் கிடைக்கும்.
டியூ தேதியைத் தவற விட்டால் தாமத கட்டணம், அதிக வட்டி (36-48% ஆண்டுக்கொண்டு), கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு போன்ற தீவிர விளைவுகள் ஏற்படும். இதை தவிர்க்க, காலண்டர் அலர்ட், ஆட்டோ டெபிட், மொத்த பேலன்ஸை முன்பே செலுத்தல், குறைந்தபட்சம் மட்டுமே கிரெடிட் பயன்படுத்துதல் போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும்.
மாதந்தோறும் ஸ்டேட்மெண்டை ஆய்வு செய்து தேவையற்ற செலவுகளை குறைத்தால், உங்கள் பணநிலை கட்டுப்பாட்டில் இருக்கும். முறையான புரிதலுடன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், அது வட்டி சுமையில்லாத நன்மையான நிதி கருவியாக அமையும்.