இந்தோனேஷியா, அதன் அழகான தீவுகள், கடலோரங்கள் மற்றும் இயற்கை வளங்களால் சுற்றுலாப் பயணிகளின் கனவுத் தலமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தோனேஷியாவை நோக்கி பயணம் செய்கிறார்கள். அங்கு செல்வதற்கு முன் நாணய மாற்ற விகிதம் குறித்த தகவல் மிகவும் முக்கியம்.

இந்தோனேஷியாவின் அதிகாரப்பூர்வ நாணயம் இந்தோனேஷியன் ருபியா (IDR) ஆகும். இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த மதிப்புடையதாக இருப்பதால், இந்திய ரூபாயை IDR-ஆக மாற்றும்போது பெரிதாக தோன்றும். எடுத்துக்காட்டாக, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 தேதியின்படி, ₹1 இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 184.07 IDR ஆக இருந்தது. அதாவது, ₹100 எடுத்துச் சென்றால், சுமார் 18,406.65 IDR பெறலாம்.
இந்த விகிதங்கள் தினசரி மாறக்கூடியவை. எனவே பயணம் செய்வதற்கு முன் நாணய மாற்ற விகிதத்தை சரிபார்ப்பது அவசியம். இந்த தகவல்களைத் தெரிந்து கொள்ள, வங்கிகளின் இணையதளங்கள், BookMyForex, XE.com போன்ற ஆப்கள் அல்லது ஆன்லைன் பிளாட்ஃபாம்கள் பயன்படுகின்றன.
வங்கிகள் வழியாக நீங்கள் நாணயத்தை மாற்றலாம். ஆனால் இது நேரமும் செலவும் அதிகமாக இருக்கக்கூடும். அதற்கு மாற்றாக, BookMyForex போன்ற ஆன்லைன் சேவைகள் விகித ரீதியாகவும், வசதியிலுமாகவும் சிறந்தவை. இதன் மூலம், வீட்டிலிருந்தபடியே நாணய பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.