DMart, இந்தியாவில் பிரபலமான சில்லறை வணிக நிறுவனம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மளிகை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், காலணிகள், பொம்மைகள் மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் அனைத்தும் பாதி விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

உதாரணமாக, Britannia Jim Jam Pops Cookies MRP ரூ.120, தற்போது ரூ.60க்கு கிடைக்கிறது. பிரிட்டானியா சீஸ் பாக்கெட் MRP ரூ.460, டிமார்ட்டில் ரூ.230க்கு கிடைக்கும். ஷானி ஃப்ரெஷ் டாய்லெட் கிளீனர் MRP ரூ.225, தற்போதைய விலை ரூ.112.
மளிகை பொருட்களில் தத்வா அர்ஹார் துவரம் பருப்பு ரூ.365 கிலோவில் ரூ.182, சஃபோலா மீல் மேக்கர் ரூ.150 இப்போது ரூ.75, EPIS கிளாசிக் சீடட் பேரீச்சம்பழம் அரை கிலோ ரூ.199 இப்போது ரூ.99க்கு கிடைக்கிறது.
குழந்தைகள் பிடிக்கும் சாக்லேட் மற்றும் பிஸ்கட் விற்பனைக்கும் அதிரடி தள்ளுபடிகள் உள்ளன. உதாரணமாக, சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸி போர்பன் பிஸ்கட் MRP ரூ.180, தற்போது ரூ.83. சமையலறை பொருட்களிலும், 5.5 லிட்டர் பட்டர்ஃபிளை ஸ்டெயின்லெஸ் அவுட்டர் லிட் ஸ்டீல் குக்கர் MRP ரூ.4,851 இப்போது ரூ.1,949க்கு கிடைக்கிறது.
மாத இறுதியில் ஸ்டாக்கை அகற்றும் முயற்சியில் டிமார்ட், புதிய மாதத்திற்கான பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் முன், மிக குறைந்த விலையில் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.