சென்னை: சென்னையில் தங்க நகைகளின் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73,840-க்கு விற்கப்பட்டது.
சர்வதேச நிலவரப்படி, தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருந்தது. இந்நிலையில், சென்னையில் தங்க நகைகளின் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73,840-க்கு விற்கப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.9,230-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தூய தங்கம் ரூ.80,552-க்கு விற்கப்பட்டது.
அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.126-க்கும், வெள்ளி கட்டிகள் கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,26,000-க்கும் விற்பனையானது.