சென்னை:
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று (அக்டோபர் 18) திடீரென குறைந்தது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று (அக்டோபர் 17) ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.12,200க்கும், ஒரு சவரன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.2,400 வரை உயர்வும் ஏற்பட்டது. தங்க விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று விலை குறைவடைந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.11,950க்கும், ஒரு சவரன் ரூ.2,000 குறைந்து ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.9,860, சவரனுக்கு ரூ.78,880 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலைவும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.13 குறைந்து ரூ.190க்கும், ஒரு கிலோ ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்ததால் திருமண நகைகள் வாங்க திட்டமிட்டவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.