கிரெடிட் கார்டு என்பது புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்படும் போது செலவுகளை கட்டுப்படுத்துவதிலும், நிதியை சரியான முறையில் நிர்வகிப்பதிலும் உதவுகிறது. ஆனால், முதல் முறையாக கிரெடிட் கார்டு வாங்குபவர்கள் சில முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு அடிப்படை அம்சங்கள் கொண்ட என்ட்ரி லெவல் கார்டுகள் போதுமானதாக இருக்கும்.

யாருக்கு கிரெடிட் கார்டு கிடைக்கும்?
மாதந்தோறும் 15,000 முதல் 30,000 ரூபாய் வரையான நிலையான வருமானம் பெற்றிருக்கும் ஊழியர்களும், வருடாந்திர வருமானம் 3.6 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் சுய தொழில் செய்பவர்களும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்முறை கார்டு பெறுபவர்களுக்கு வங்கிகள் குறைந்த கடன் உச்சவரம்பை (Credit Limit) வழங்குகின்றன.
சிறந்த என்ட்ரி லெவல் கார்டுகளின் அம்சங்கள்
- குறைந்த நுழைவு மற்றும் ஆண்டு கட்டணம் (சில கார்டுகளுக்கு கட்டணம் இல்லை).
- மளிகை, எரிபொருள், கேஸ், மின்சாரம் போன்ற பில்கள் கட்டும்போது அதிக ரிவார்டுகள் அல்லது கேஷ்பேக்.
- அதிக செலவைத் தவிர்க்க, ஃபிக்ஸ்டு டெபாசிட் அடமானமாக வைத்து வழங்கப்படும் கார்டுகள்.
பிரபலமான என்ட்ரி லெவல் கிரெடிட் கார்டுகள்
- Amazon Pay ICICI Bank Card
- நுழைவு/ஆண்டு கட்டணம் இல்லை.
- அமேசான் பிரைம் பயனாளர்களுக்கு 5% கேஷ்பேக், மற்றவர்களுக்கு 3%.
- Amazon Pay பார்ட்னர்களிடம் 2%, மற்ற இடங்களில் 1% கேஷ்பேக்.
- Axis Bank ACE Card
- நுழைவு/ஆண்டு கட்டணம் ₹499.
- Google Pay மூலம் மின்சாரம், கேஸ், DTH, ரீசார்ஜ் கட்டும்போது 5% கேஷ்பேக்.
- Swiggy, Zomato, Ola – 4% கேஷ்பேக், பிற செலவுகள் 1.5%.
- SimplyCLICK SBI Card
- நுழைவு/ஆண்டு கட்டணம் ₹499.
- Apollo, BookMyShow, Myntra, Yatra போன்ற தளங்களில் 5X ரிவார்டு பாயிண்டுகள்.
- 500–3000 ரூபாய் எரிபொருள் டிரான்சாக்ஷன்களுக்கு 1% தள்ளுபடி.
- HDFC MoneyBack+ Card
- நுழைவு/ஆண்டு கட்டணம் ₹500.
- Amazon, Flipkart, Swiggy, Reliance, BigBasket போன்ற இடங்களில் 10X கேஷ்பாயிண்ட்ஸ்.
- ஒரு காலாண்டில் ₹50,000 மேல் செலவு செய்தால் ₹500 கிஃப்ட் வவுச்சர்.
முக்கிய குறிப்பு
முதன்முறையாக கிரெடிட் கார்டு எடுக்கும் போது, அதிக கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள் தரும் கார்டுகளைத் தேர்ந்தெடுத்தால் நன்மை. செலவினங்களை கட்டுப்படுத்தவும், வருமானத்திற்கு ஏற்ப கார்டை பயன்படுத்தவும் கவனம் செலுத்த வேண்டும்.