சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,200-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 7150-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிராமுக்கு ரூ. 100-க்கு விற்பனையாகிறது.

நேற்று மார்க்கெட் விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. சனிக்கிழமை (டிச. 28) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ஒரு சவரன் ரூ. 57,080-க்கும் விற்பனையானது.
அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை (டிச. 27), சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,200-க்கும் விற்பனையானது.சங்கடம் மற்றும் மகிழ்ச்சிக்கிடையே மாறும் தங்கத்தின் விலை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் கவலையைக் கொடுக்கிறது.